இந்திய சட்ட ஆய்வு இதழ்

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது

திருவள்ளுவர் (குறள் 772)

  • வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும் கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.

for english version

இந்திய சட்ட ஆய்வு இதழ்

இந்திய சட்ட ஆய்வு இதழ் [Indian Legal Research Journal - ILRJ] என்பது ஒரு இணையதள சட்ட தமிழ் இதழ் ஆகும். நீதி துறையில் தமிழ் வளர்ச்சி பெற்று வரும் நிலையில் தமிழில் சட்ட புலன்களை பெறுக்கும் நோக்கோடு இந்த ஆய்வு இதழ் தொடங்கப்பப்பட்டுள்ளது. இவ்விதழ் Indian Journal of Legal Review க்கு கீழ் இயங்கும் இதழாகும். இது ஆண்டுக்கு நான்கு முறை இணையத்தளத்தில் வெளியிடப்படும். இவ்விதழ் கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள், வழக்கு கருத்துகள், ஆராய்ச்சி ஆவணங்கள், வெளியிடுவதற்கான ஒரு ஊடாடும் தளத்தை நிறுவ விரும்புகிறது. இவ்விதழ் சட்ட ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான பார்வையுடனும், தலையங்கக் குழுவுடன் சட்ட துறையில் சிறப்பான பங்களிப்பை கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய சட்ட ஆய்வு இதழ், சட்டத்தின் அனைத்து கிளைகளில் இருந்தும் வேறு எந்த இதழ்களிலும் வெளியிடப்படாத, கருத்து களவு அல்லாத சுய படைப்புகளை வரவேற்கிறது.

நிகழ்ச்சிகள்

சமீபத்திய படைப்புகள்